2.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள ஒக்சிமீட்டர்களை விமான நிலையம் ஊடாக கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்கு முனையம் ஊடாக சாதனங்களை கடத்த முயன்றபோது திங்கள்கிழமை (6) அவை பறிமுதல் செய்யப்பட்டன.
முகவர் எனகூறிய ஒருவர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஒக்சிமீட்டர்களை, இலங்கை விமான நிறுவன சரக்கு அதிகாரிகளிடம் சமர்ப்பித்து பெற்றுள்ளார். சுங்க அறிவிப்பு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் ஒப்புதல் மற்றும் இலங்கை சுங்கத்திற்கு பொருந்தும் வரிகளைச் சமர்ப்பிக்காமல் அவை விடுவிக்க முயற்சிக்கப்பட்டது.
எனினும், பரிசோதனையின் போது 21 அட்டைப்பெட்டிகளில் 4200 ஒக்சிமீட்டர்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, சந்தேகநபர் கைதாகினார். அவற்றின் மதிப்பு ரூ. 2,344,642 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.