யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 124 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 282 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், புங்குடுதீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் (கோப்பாய் வடக்கில் வீட்டில் உயிரிழந்த 60 வயதான பெண் உள்ளடங்கலாக), தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 9 பேர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பேர் என மொத்தம் 26 பேருக்கு தொற்று உறுதியானது.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 44 பேர் (3, 6, 13, 14 சிறார்களும் உள்ளடக்கம்), வவுனியா பொது வைத்தியசாலையில் 6 பேர் (19 நாளான சிசுவும் உள்ளடக்கம்), செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 6 பேர் (8 வயது சிறுமியும் உள்ளடக்கம்), நெடுங்கேணி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என 57 பேருக்கு தொற்று உறுதியானது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 7 பேர் (13 வயது சிறுமி, 14 வயது சிறுவன் உள்ளடக்கம்), ஒட்டுசுட்டான் மாவட்ட வைத்தியசாலையில் 3 பேர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் 11 பேர் (14 நாள், 44 நாள், 2 வயதான சிசுக்களும், 60 நாள் சிசுவும் அதன் தாயாரும் உள்ளடக்கம்) என 21 பேருக்கு தொற்று உறுதியானது.
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 8 பேர் (17 நாள், 24 நாள் சிசுக்கள், 1 வயதான சிறுவனும் 18 வயதான தாயாரும் மற்றும் வீட்டில் உயிரிழந்த 81 வயதான ஆணும் உள்ளடக்கம்) தொற்றிற்குள்ளாகினர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் 3 பேர், மன்னார் கடற்படை முகாமில் ஒருவர், பலாலி விமானப்படை முகாமில் 5 பேர், பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர்.