சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகையாக அறிமுகமாகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார்.
அதிதி ஷங்கரை தனது குடும்பத்தில் ஒருவராக வரவேற்பதாக நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
‘நீங்கள் ஒவ்வொருவரின் இதயத்தை வெல்வீர்கள்’ என்று அவர் பதிவு செய்துள்ளார்.
அதேபோல் இயக்குனர் ஷங்கர் தனது மகளை அறிமுகம் செய்யும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் கார்த்தி, முத்தையா, யுவன்சங்கர்ராஜா ஆகியோருக்கும் தனது நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.