அண்ணாத்த உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பாலாவு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறன
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா, தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். மேலும் அஜித் நடித்த வீரம், கார்த்தி நடித்த தம்பி’உள்பட பல படங்களில் நடித்த இவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறன.
நடிகர் பாலாவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.