24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
உலகம்

எதிர்ப்பை ஒருபோதும் கைவிட மாட்டேன், ஆப்கானியர்கள் உரிமைகளுக்காக போராடுவதில் சோர்வடைய மாட்டார்கள்: மசூத்

பஞ்ஷிர் மாகாணத்தில் உள்ள தலிபான் எதிர்ப்புப் படைகளின் தளபதிகளில் ஒருவரான அஹமத் மசூத், கடவுள், நீதி மற்றும் சுதந்திரத்திற்காக தனது எதிர்ப்பை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

பஞ்ச்ஷிரில் உள்ள எதிர்ப்பு மற்றும் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பன, தங்கள் சட்டபூர்வமான உரிமைகளுக்காக நிற்கும்போது, மக்கள் ஒருபோதும் தம்மை கைவிட மாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது என தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு, பன்ஷிர் மாகாணத்தில் போர் தீவிரமடைந்தது. பின்னர் அந்த மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மசூத் தனது முகநூல் பதிவில், ஆப்கானிஸ்தான் மக்கள் ஒருபோதும் சோர்வடையாமல் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதாகவும், வளர்ந்த மற்றும் சுதந்திரமான ஆப்கானிஸ்தானுக்கு பாடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தை நீங்கள் கைவிடும்போது மற்றும் நீங்கள் சோர்வடையும் போது மட்டுமே தோல்வி ஏற்படும்.” அஹமத் மசூத் குறிப்பிட்டுள்ளார்.

பன்ஷிர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், தலிபான் எதிர்பாளர்களான அஹ்மத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே ஆகியோர் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அம்ருல்லா சலே வெளியிட்ட வீடியோ கிளிப்பில் அவர் இன்னும் பஞ்ஷிர் மாகாணத்தில் இருப்பதாக கூறினார்.

அவரது வீடியோவில், தலிபான்கள் மாகாணத்திற்கு மனிதாபிமான உதவியை மறுப்பதாக குற்றம் சாட்டினர். ஐ.நா நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுத்து மாகாணத்திற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment