28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் மீண்டும் பிசிஆர் சோதனை ஆரம்பிக்கிறது!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கொவிட் 19 பரவல் அதிகரித்து வரும் நிலையில், பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து மூன்று பேர் பல்கலைக்கழகத்தின் நிதி மூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொவிட் 19 பி. சி. ஆர். ஆய்வு கூடத்தில் பணியாற்றிவந்த 4 மருத்துவ ஆய்வு கூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதனால், பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கடந்த மாத்த்தின் நடுப்பகுதியில் இருந்து மருத்துவ பீடத்தில் பி. சி. ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து உடனடியாக ஒப்பந்த அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் நிதியில் இருந்து தற்காலிகமாகப் தேவையான ஆளணியை உள்வாங்குவதற்குத் துணைவேந்தர் பணித்திருந்தார்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் மூலம் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதனால், விரைவில் சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment