முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் எம்.பி. ராமநாயக்கவுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஜனவரி 12 ஆம் திகதி 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் தனது நாடளுமன்ற ஆசனத்தை இழந்தார். அவரது மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு நாட்டின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ரஞ்சன் ராமநாயக்கவை மன்னிக்குமாறு பல தரப்பினரும் முன்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள் மற்றும் பிற சிவில் சமூகக் குழு உறுப்பினர்கள் என பல தரப்பினரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1