பிரேசிலில் 3 வங்கிகளை கொள்ளையடித்த கும்பல் தப்பிச் செல்லும் போது, தமது வாகனத்தில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து கட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை நள்ளிரவு சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள அரகடுபாவில் பிரம்மாண்டமான தொடர் வங்கிக் கொள்ளைகள் நடந்தன.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும், வங்கிகளில் பணியாற்றுபவர்களின் மூலமே தகவல் பெற்று, கொள்ளையர்கள் களமிங்கியதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். சுமார் 15-20 கொள்ளையர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் பெரும் மோதல் இடம்பெற்றது. துப்பாக்கிச்சூட்டினல் அரகதுபா நகரம் அதிர்ந்துள்ளது.
நகரம் முழுவதும் 20 இடங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. பொலிசாரையும், பொதுமக்களையும் திசைதிருப்பி காரியத்தை முடிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குண்டு வெடித்த பின்னர் துப்பாக்கி முனையில் 3 வங்கிகளும் கொள்ளையிடப்பட்டன. அவர்கள் வெளியேறிய போது, வீதியில் நின்ற பொதுமக்களை 10 கார்களில் கட்டி,பணயக்கைதிகளா கட்டிச் சென்றனர்.
வங்கிக் கொள்ளையர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி பொலிசாரை கண்காணித்ததோடு, தம்மைத் துரத்துபவர்களை மெதுவாக்க செல்லும் வழியில் கார்களுக்கு தீ வைத்தனர்
#ARACATUBA #Araçatuba está acontecendo um assalto enorme. Reféns esto sendo usados como escudo humano. Que loucura, parece um filme. Deus proteja a todos pic.twitter.com/gYE1feCUto
— Rafael Aguiar (@RaR_Aguiar) August 30, 2021
தப்பியோடிய ஒரு பெண்ணும், கொள்ளையன் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
சந்தேகநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்..