அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுமென சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு எந்த நேரத்திலும் நீக்கப்படும் என்று அவர் கூறினார். அதை அகற்றுவதற்கு முன் பொது போக்குவரத்து மற்றும் ஊழியர்களைக் கையாளக்கூடிய நிறுவனங்களில் ஒரு புதிய சுகாதாரப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், இல்லையென்றால், நாடு திறந்தவுடன் கோவிட் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்றார்.
சுகாதாரத் துறையால் மட்டுமே கோவிட் வைரஸை தோற்கடிக்க முடியாது என்றும் அதற்காக மக்களின் ஆதரவை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஹேரத் கூறினார்.