இடுப்பில் சாராயப் போத்தல் செருகிக் கொண்டு சென்ற ஒருவர் விபத்தில் சிக்கிய போது, சாரயப் போத்தல் இடுப்பில் குத்தி காயமடைந்துள்ளார்.
கச்சாய் பகுதியில் நேற்று (31) இந்த சம்பவம் நடந்தது. கச்சாய் வீதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.
கச்சாய் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீடு குடிபுகுதல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அங்கு தனக்கு மதுப்போத்தல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இடுப்பில் செருகிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது விபத்திற்குள்ளாகியுள்ளார். இதன்போது, சாராயப் போத்தல் உடைந்து இடுப்பில் குத்தி காயமேற்படுத்தியது.
படுகாயமடைந்த அவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1