நியூஸிலந்தின் பெரும்பாலான பகுதிகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது.
ஒக்லாந்தில் தற்போது 4ஆம் கட்டக் கடுமையான முடக்கநிலை நடப்பில் உள்ளது. அங்கு, முடக்கநிலை, இன்னும் 2 வாரங்களுக்குத் தொடரும்.
மற்ற பகுதிகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டதால் மக்கள் மீண்டும் வெளியே, பொது இடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், நியூஸிலந்தில் பொதுவாக, அனைத்து இடங்களிலும் பாடசாலைகள், அலுவலகங்கள் போன்றவை இன்னும் மூடப்பட்டுள்ளன.
அதே வேளையில் வர்த்தகங்கள் இணையத்தின் மூலம் அல்லது மற்ற தொடர்பற்ற வழிகளில் மட்டுமே சேவைகளை வழங்கலாம்.
இதற்கிடையே நியூஸிலந்தில் மேலும் 75 பேருக்குக் தொற்று உறுதியானது. அவர்களில் 74 பேர் ஒக்லாந்தில் உள்ளவர்கள்; ஒருவர் வெலிங்டனில் உள்ளவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1