வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இன்று நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிட் தொற்று காரணமாக வவுனியாவின் குடியிருப்பு, தாண்டிக்குளம், தேக்கவத்தை, கோயில்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 99, 86, 39, 76 வயதுகளையுடைய நான்கு பேரே மரணமடைந்தவர்களாவர்.
குறித்த நான்கு பேரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1