கனடாவின் டொரன்டோவில் பெண் ஒருவர் ஹைட்ரோ கம்பத்தில் மோதியதால், ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரமில்லாமல் திண்டாடிய சம்பவம் இன்று இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 9:15 மணியளவில் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளிற்கிடையில் இந்த விபத்து நடந்தது.
விக்டோரியா பார்க் அவென்யூவில் ஒரு கருப்பு செடான் வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது அது ஒரு பாதசாரியை தாக்கி ஹைட்ரோ கம்பத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
வயதான ஒரு பெண் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சாரதி காயமடையவில்லை, அவர் புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மோதலுக்கான காரணம் தெரியவில்லை.
இந்த விபத்து செயின்ட் கிளேர் அவென்யூ கிழக்கு தெற்கே தொடக்கம் ஏரி மற்றும் பிரதான வீதி கிழக்கே பிர்ச்மவுண்ட் சாலை வரையான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது என்று டொராண்டோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.
சுமார் 3,000 வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.