26.9 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

மரண வீட்டிற்கு சென்ற 28 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் சுகாதார விதிமுறையை மீறி இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 24 ஆம் திகதி வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. இதில் சுகாதார விதிமுறையை மீறி பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரணசடங்கில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு இன்று (30) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி, மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், சுகாதார விதிமுறையை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil

நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை

east tamil

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

east tamil

Leave a Comment