150,000 ஃபைசர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டுக்கு எடுத்து வரப்பட்டன.
815 கிலோ எடையுள்ள சரக்கு ஏற்றி வந்த விமானம், நெதர்லாந்தில் இருந்து தோகா, கத்தார் வழியாக நள்ளிரவு 2.15 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதேவேளை, ஃபைசர் தடுப்பூசி வழங்கும் பணி இலங்கை இராணுவத்திடம் மட்டுமே வழங்கப்படுமென நேற்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1