யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இராணுவத்தினரால் வீடு கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த தேசிய வெசாக் தினத்தன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண நிலை காரணமாக இன்றைய தினம் உடுவில் மற்றும் கீரிமலை பகுதிகளில் அமைக்கப்பட் வீடுகள் இரண்டு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு பலாலி இராணுவ கட்டளைத் தலைமை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.