கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (29) இரவு இவ் விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
–க.கிஷாந்தன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1