இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் நேற்று (29) இணையவழியாக இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கோதாவில் எம்.ஏ.சுமந்திரன் அணி அரசுடன் பேச்சு முயற்சியை ஆரம்பித்த விடயம் கட்சிக்குள்ளும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விளக்கமளிக்க இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
கடந்த முறை அரச தரப்புடன் நடத்திய பேச்சு விவகாரங்களை பேசாமல், அப்படியொரு சம்பவம் நடப்பதையே கட்சிக்குள் காண்பிக்காமல் இருந்த இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர், இம்முறை நெருக்கடி அதிகரித்ததையடுத்து, நேற்று கட்சிக்குள் விளக்கமளித்தனர்.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் பா.சத்தியலிங்கம், பொ.செல்வராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1