Pagetamil
கிழக்கு

சாய்ந்தமருதில் நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி!

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை (30) முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

இந்த இரண்டாம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழங்கப்படவுள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 08.00 மணிமுதல் பகல் 01.00 மணிவரை சாய்ந்தமருது 01 கிராம நிலதாரி பிரிவு மக்களுக்கு அல்-ஜலால் பாடசாலை முன்பாக அமைந்துள்ள கிளினிக் சென்டரிலும், சாய்ந்தமருது 08 கிராம நிலதாரி பிரிவு மக்களுக்கு பிரதான வீதியில் அமைந்துள்ள அல்- ஹிலால் வித்தியாலயத்திலும், சாய்ந்தமருது 14 கிராம நிலதாரி பிரிவு மக்களுக்கு பிரதான வீதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், வொலிபேரியன் கிராம மக்களுக்கு வொலிபேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை அடங்களாக பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும் பொதுமக்கள் இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் சட்டங்களை மதித்து நடக்குமாறும் பொதுமக்களை இதன்போது கேட்டுக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு தடையுத்தரவு!

east tamil

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்ட 77வது தேசிய சுதந்திர தினம்

east tamil

ஏறாவூர் நகரசபையில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்

east tamil

Leave a Comment