டொனால்ட் ட்ரம்பின் மருந்தை இலங்கை ஏன் இறக்குமதி செய்யாமல் தவிர்த்தது?

Date:

உலகெங்களவில் கொரோனா நோயாளிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட REGN-COV2 மருந்துக்கு இலங்கை மருத்துவர்களும் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில், அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்று உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து உதவும் என்று பரிந்துரைத்தார்.

மருந்தை எடுத்துக்கொள்ளும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என்று டாக்டர் சந்திம ஜீவந்தர கூறுகிறார்.

மேலும், இந்த மருந்து இதய நோய் மற்றும் தொற்றுநோய்களின் தாக்கத்தை குறைக்கும் என்று அவர் நம்புகிறார்.

எனினும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருந்தை இறக்குமதி செய்ய உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒரு தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் எப்படி திடீரென ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது என்றும் இலங்கை சுகாதாரத் துறையிடம் சிங்கள ஊடகம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மருந்தின் அதிக விலை காரணமாக இந்த மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார்.

அந்த வகையில் REGN-COV2 மருந்தின் ஒரு டோஸ் சுமார் 127,000 எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், இந்த மருந்து முதன்முதலில் உலக அளவில் பேசப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்