பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இல்லை. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. அவரது உடல்நலம் குறித்த வதந்திகள் பொய்யானவை என்று பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக பரவிய தகவலையடுத்து, இத்தகைய தகவல்கள் பொய்யானவை என்றும், பிரதமர் நலமாக இருப்பதாகவும் யோசித கூறினார்.
“பிரதமர் தனது தினசரிப் பணியைத் செய்து வருகிறார். இன்று காலை கோவிட் -19 செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த தொற்றுநோயை சமாளிக்க நாடு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று யோசிதா கூறினார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1