ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 723 பேரில், 311 சந்தேகநபர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
2019 குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 311 சந்தேக நபர்கள் இன்னும் காவலில் உள்ளனர்.
ஏப்ரல் 21, 2019 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினரால் குறுகிய காலத்திற்குள் திட்டமிடப்படவில்லை.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்புக்கு முன்னர் நடந்த சம்பவங்களை பகுப்பாய்வு செய்யும் போது, ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நீண்ட காலத்திற்கு திட்டமிடப்பட்டவை என்ற முடிவுக்கு அவர்கள் வரலாம்.
மேலும், 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ. 365 மில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.