இந்தியாவின் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு காளி கோயிலில் நூடில்ஸ் மற்றும் சாப்ஸ்டிக் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவை சீன வகை உணவுகளாகும்.
அந்த காளி சைனீஸ் காளியென்பதால், சீன உணவுகளே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கொல்கத்தாவின் பிரபலமான தாங்கரா டவுண் பகுதியில் இந்த கோயில் உள்ளது. இந்த பகுதியை சீனா டவுண் என்றும் மக்கள் அழைப்பார்கள். இந்த கோவிலில் உள்ள காளி, வழக்கமான இந்துக் கோயில்களில் உள்ள காளி போலவே தான் இருக்கும். எனினும், சீனா டவுண் காளியென்பதால், நூடில்ஸ் பிரசாதமாக படைக்கப்படுகிறது.
படங்களை பார்க்க இங்கு அழுத்துங்கள்
காளிக்கு படைத்த பின்னர் அது பக்தர்களுக்க விநியோகம் செய்யப்படும். இது மட்டுமல்ல பல சீன பாரம்பரிய உணவுகளும் காளிக்கு படைக்கப்படும்.
#Chinese #Kali Temple get noodles and chopsuey as prasad –http://t.co/7svrv4kOgv
#kalimaa – Shri Radhe Maa pic.twitter.com/GsN4zoqHsT— Shri Radhe Maa (@shriradhemaa) January 7, 2014
இந்த கோவில் 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முதல் 20 ஆண்டுகள் வெறும் மரத்தடியில் உள்ள கற்களை தான் காளியாக மக்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் மேற்கு வங்க மக்களும், சீனர்களும் இணைந்து இந்த காளி கோயிலை கட்டினர். அதனால் தான் இந்த காளி சைனீஸ் காளியாக வழிபடப்படுகிறது.