27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

வீதிவிபத்தால் நடமாட முடியாமல் முடங்கிய இலங்கைப் பணிப்பெண்ணிற்கு 54 மில்லியன் ரூபா இழப்பீடு: டுபாய் நீதிமன்றம் உத்தரவு!

டுபாயில் வீதி விபத்திற்குள்ளாகி நடமாட முடியாத நிலைமைக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்க, டுபாய் நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

தரங்க தில்ருக்ஷி (45) விபத்தை தொடர்ந்து சக்கர நாற்காலியில் தற்போது வாழ்க்கையை நகர்த்துகிறார். விபத்தினால் ஏற்பட்ட இந்த நிலைமைக்கு இழப்பீடு கோரி, ஒரு வருட காலம் சட்டப்போராட்டம் நடத்தி, இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

இப்பொழுது அவருக்கு சுமார் 54 மில்லியன் இலங்கை ரூபாய் இழப்பீடு கிடைக்கவுள்ளது.

கடந்த ஆண்டு மே 24 ஆம் திகதி பர் துபாய் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜீப்ரா கடவையில் இந்த விபத்து நடந்தது.

“நான் வீதியைக் கடக்கும்போது ஒரு இந்தியர் ஓட்டிய கார் என்னை மோதியது. சாரதிக்கு எதிராக போக்குவரத்து நீதிமன்றம்  5,000 திர்ஹம் அபராதம் விதித்தது, ”என தில்ருஷி தெரிவித்தார்.

YAB சட்டக் குழுவின் சட்டப் பிரதிநிதியான சலாம் பாப்பினிசேரி, வாகன சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உதவினார்.

“விபத்தின் போது, ​​தில்ருக்ஷிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவர் சக்கர நாற்காலியில் நடமாடினார். மற்றவர்களின் ஆதரவு இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது. அவரது உடல்நிலை காரணமாக, வேலைக்குச் சென்று சாதாரண வாழ்க்கையை நடத்த முடியவில்லை. விபத்து வழக்கில் இழப்பீடு பெற உதவிக்காக அவர் என்னை அணுகினார். சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட பிறகு, அவருடைய நிலைமைக்கு உதவ நான் முடிவு செய்தேன்.

தில்ருக்ஷி இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் டுபாயில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவு மற்றும் மருந்து தேவை. எப்போதும் அவர் பக்கத்தில் யாராவது இருக்க வேண்டும். மற்றவர்களின் உதவியின்றி அவரால் செயற்பட முடியாது. அவருக்கு மருத்துவ உதவி தேவை. அவர் மனம் மிகவும் தெளிவாக இல்லை. எண்ணங்களின் தெளிவு இல்லை. இத்தகைய சூழ்நிலைகளில், அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவு தேவை” என்று பாப்பினிசேரி கூறினார்.

பாப்பினிசேரியின் ஆலோசனையின் படி, தில்ருக்ஷி டுபாய் நீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்தார்.காப்பீட்டு நிறுவனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி யூனுஸ் முகமது அல் ப்ளூஷி, சட்டத்தரணி முகமது இப்ராஹிம் அல் சுவைதி மற்றும் சட்டத்தரணி ருக்கியா அல் ஹஷிமி ஆகியோர் மருத்துவ அறிக்கை, தடயவியல் அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் உள்ளிட்ட வலுவான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டtரின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து இறுதியாக தில்ருக்ஷிக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்குவதற்கு முன் இரு தரப்பு வாதங்களையும் கேட்டனர். தில்ருக்ஷியின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கை மற்றும் காயங்களை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், நீதிமன்றம் 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடாக வழங்கியது.

1995 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து மற்றும் விபத்துச் சட்டத்தின் 26 வது பிரிவின்படி, காப்பீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு மற்றும் வழக்கு  கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இப்பொழுது தில்ருக்ஷி இலங்கைக்குத் திரும்பியுள்ளார். கணவரின் பராமரிப்பில் அவரும், 15 மற்றும் 14 வயதான பிள்ளைகளும் உள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment