கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி சபையின் மதுபான வடிசாலையின் பணியாட்களுக்கு கடந்த இரு வாரத்திற்கு முன் தொற்று ஏற்ப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு பணியாற்றியவர்களது குடும்ப உறுப்பினர்கள், பணியாட்கள் பலருக்கு தொற்று அதிகரித்து வந்த நிலையில் அங்கு பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்று வரணி வடக்கு ஶ்ரீ கணேசா சனசமூக நிலையத்தில் வைத்து 79 பேருக்கான அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1