27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

கொரோனா நோயாளிகள் நீரிழப்பை தடுக்க 2 லீற்றர் நீர் அருந்துங்கள்!

கோவிட் -19 நேர்மறை நோயாளிகள் நீரிழப்பைத் தடுக்க  தினமும் இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஊட்டச்சத்து பிரிவு விரிவுரையாளர் வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஜெயவர்த்தன தெரிவிக்கையில், சிறிதளவு வெப்பநிலை கூட உள்ளவர்கள், சுவை இல்லாமை, இருமல் மற்றும் சுவாசக் கஷ்டம் உள்ள கோவிட் நோயாளிகள்  குடிநீரை அருந்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

அத்தகைய நபர்கள் உணர்வுபூர்வமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஒருவரின் நீர் உட்கொள்ளும் பதிவை வைத்திருப்பது தண்ணீர் உட்கொள்ளலை கண்காணிக்கும் ஒரு முறையாகும்.

ஒருவரின் சிறுநீரின் நிறத்தின் மூலம் போதுமான அளவு தண்ணீர் குடித்திருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்க முடியும். போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் சிறுநீர் தெளிவாக இருக்கும்.

விதிவிலக்காக ஒருவர் விட்டமின்களை எடுத்துக் கொண்டால், அது சிறுநீரின் நிற மாற்றத்திற்கு பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.

எனவே கோவிட்-பொசிடிவ் நோயாளிகள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் உட்கொள்வதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், மீதமுள்ளவற்றை உணவு உட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment