ஒட்சிசனை ஏற்றியபடி வந்த இந்திய கடற்படை கப்பலான சக்தி, இன்று (23) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, 90 தொன் ஒட்சிசனுடன் இந்தக் கப்பல் கடந்த 19ஆம் திகதி பயணத்தை தொடங்கியிருந்தது.
இதேவேளை, சென்னை துறைமுகத்தில் 39 தொன் ஒட்சிசனை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இலங்கை கடற்படை கப்பலான சக்தி, நாட்டை நெருங்குகிறது என்று கடற்படை செய்தி தொடர்பாளர் கப்டன் இந்திகா டி சில்வா கூறினார்.
இதற்கிடையில், மருத்துவமனைகளில் அதிகரித்துவரும் ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்ய திரவ ஒட்சிசனை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹாங்குடனான சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.