தேசிய ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சில தினங்களின் முன்னர் எரிபொருள் இருப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
பெற்றோல், டீசல் என்பன சில தினங்களிற்கு போதுமானளவு இருப்பே உள்ளதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் எரிபொருள் நிலையங்களின் முன் மக்கள் முண்டியடித்து வருகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1