இந்தியாவின் சென்னை துறைமுகத்தில் இருந்து மருத்துவ ஒட்சிசனை ஏற்றியபடி, இலங்கை கடற்படை கப்பல் சக்தி இன்று காலை இலங்கையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த கப்பல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இந்தியாவின் சென்னையை சென்றடைந்தது.
இதேவேளை, இந்திய கடற்படை கப்பல் சக்தி, மருத்துவ ஒட்சிசன் ஏற்றியபடி விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, நேற்று மாலை இலங்கையை நோக்கி வந்த கொண்டிருக்கிறது.
இரண்டு கப்பல்களும் முறையே ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கொழும்புக்கு வர திட்டமிடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு ஒட்சிசன் வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த, இந்திய கப்பலில் ஒட்சிசன் எடுத்து வரப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1