25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
உலகம்

காபூலில் இரவில் ஊரடங்கு: வாழ்க்கை முறையை மாற்றிய ஆப்கானியர்கள்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்படுத்திய பின்னர், தலிபான்களின் எதிர்கால அணுகுமுறை குறித்து உலகத்திற்கு இருப்பதை போலவே, ஆப்கானியர்களிற்கும் பெரும் சந்தேகம் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட காபூலில் ஓகஸ்ட் 14ஆம் திகதி வரை- தலிபான்கள் கைப்பற்றியது வரையான வாழ்க்கை முறையையை மக்கள் வாழவில்லை. அவர்கள் சடுதியாக தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

காபூலில் தற்போது இரவு 9 மணிக்கு பின்னர் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர்ந்த வேறு காரணங்களிற்காக வீடுகளை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் உறுப்பினர்கள் காபூலின் ஒவ்வொரு மசூதியிலும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். ஊரடங்கு நேதரத்தில்  உதவி தேவைப்பட்டால் அவர்களின் தொடர்பு எண்களைப் பகிர்ந்துள்ளனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தலிபான்கள் நகரத்தில் திருடர்களைக் கைது செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மக்களிடம் வரவேற்பை பெறும் விதமாக வித்தியாசமான தண்டனை திருடர்களிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

சில குற்றவாளிகள் போலீஸ் புறக்காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுட்டனர். சிலர் பொதுமக்கள் முன் அடித்து நொறுக்கப்பட்டனர். மற்றவர்கள்- பெரும்பாலும் இளைஞர்கள்- மன்னிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் திருட்டில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது.

தலிபான்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று எச்சரிக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக இசை கேட்பதை தடை செய்யவில்லை. ஆனால், சிறுவர்கள் ஜீன்ஸ் அணிவதை மிகவும் அரிதாகவே காண முடிகிறது. அதே சமயம் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.

ஒருவரை கட்டி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் தலிபான் உறுப்பினர்

யாரும் பொதுவில் இசையைக் கேட்பதில்லை. உணவகங்கள் உரத்த சத்தத்தில் இசையை ஒலிக்கவிடவில்லை.

டிவி சனல்களும் இசையை ஒளிபரப்பவில்லை. இரவில் அதிக பார்வையாளர்களை கொண்ட நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர் நாடகங்களையும் நிறுத்தி விட்டனர்.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் இவை எதற்கும் சட்டங்களை அறிவிக்கவில்லை. ஆனால் 1996ஆம் ஆண்டு முதல் நடந்த தலிபான்களின் ஆட்சியில் இவை தடை செய்யப்பட்டிருந்தன. அதை நினைத்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment