13 வயது சிறுமியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 37 வயதான குடும்பஸ்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆபாச வீடியோவை பார்த்த அதிர்ச்சியில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணேமுல்ல பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள சர்வதேச பாடசாலையொன்றி் கல்வி கற்கிறார்.
அவருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், ஆபாச வீடியோவொன்றையும் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த இலக்கத்திற்கு பெற்றோர் தொடர்பு கொண்டபோது, சம்பவம் தொடர்பாக முறையிட்டால் கொலை செய்வதாக மிரட்டப்பட்டனர்.
எனினும், கணேமுல்ல பொலிசாரிடம் பெற்றோர் முறையிட்டனர்.
துரிதமாக செயற்பட்ட பொலிசார், தொலைபேசி உரிமையாளரான-ராகம பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆபாச வீடியோவை அனுப்பியதை ஏற்றுக்கொண்டார்.
அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோவை பார்த்த அதிர்ச்சி, மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.