27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
கிழக்கு

கயஸ் வாகனம்- இபோ.ச பேருந்து மோதல்!

மட்டக்களப்பு- பிள்ளையாரடி பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பேருந்தினை அதே திசையில் வந்த கயஸ் ரக வாகனம் முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்னாள் இடம்பெற்ற குறித்த விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

விருட்சத்தின் வாசகர் வட்ட கலந்துரையாடல்

east tamil

மியான்மார் அகதிகளுக்கு ரிசார்ட் உதவி

east tamil

சிறைச்சாலை பேருந்திலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!

Pagetamil

திருமலையில் முன்பள்ளி சிறார்களால் விழிப்புணர்வு

east tamil

கிராமசேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil

Leave a Comment