கல்வித் துறையில் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிற்கும், அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான கலந்துரையாடல் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிந்தது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது,
நேற்றைய சந்திப்பின் போது ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து எம்மிடம் கேட்கப்பட்டது. சுபோதினி குழு அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்வுக்கு மட்டுமே தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொள்ளும் என்று அமைச்சரவை உபகுழு அறிவிக்கப்பட்டது என கூறினார்.
சுபோதினி குழு அறிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்வை வழங்க உபகுழு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தாலும், அவர்கள் இன்னும் மற்ற அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டதாக மகிந்த ஜெயசிங்க கூறினார்.
உபகுழு நிதி அமைச்சுடன் கலந்துரையாடும் என்றும் அதன் பரிந்துரைகளை திங்கள்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என்றும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
திங்கள்கிழமை அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
திங்களன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா என்பதை முடிவு செய்யும் என்று ஜெயசிங்க கூறினார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகுவது உள்ளிட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொடரும் என்று குழுவுக்கு அறிவித்ததாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை உடனடியாக தீர்த்து தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குவதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக ஜெயசிங்க கூறினார்.