நாட்டின் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு COVID-தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தேவை அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட GMOA, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்களிற்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் கடுமையான கொரோனா வைரஸ் மாறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியின் தேவை நிபுணர் குழுவால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1