சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் எட்டு பொருட்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பசுமை சமூகப் பொருளாதாரத்திற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டது.
சச்செட் பக்கெட்டுகள் உட்பட ஐந்து தயாரிப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், சந்தையில் இருந்து முறையாக அகற்றப்பட்டு வருவதாகவும் மேலும் எட்டு தயாரிப்புகளும் எதிர்காலத்தில் தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் அமரவீர கூறினார்.
லஞ்ச் ஷீட் தடை தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றார் அமைச்சர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஷொப்பிங் பேக்குகளின் பயன்பாடும் குறைக்கப்படும் என்றார்.