காபூலில் இருந்து செய்தி வெளியிடும் போது ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் ஆடை மாற்றம் தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உலகளவில் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சிஎன்என் தலைமை செய்தியாளர் கிளாரிசா வார்ட் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, “அவர் ஒரு பெண் என்பதால்” ஒதுங்கியிருக்குமாறு தலிபான்களால் குறிப்பிடப்பட்டதாக தெரிவித்தார்.
தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, திங்களன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரில் கமராவுடன் பேசியபோது கிளாரிசா வார்ட், கருப்பு உடை அணிந்து ஹிஜாப் அணிந்திருந்தார்.
24 மணி நேரத்திற்கு முன்பு அவள் வண்ண உடையில் காணப்பட்டார். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அவரது தோற்றமும் மாறியது.
2016 முதல் சிஎன்என்இல் பணிபுரியும் 41 வயதான அவர், தலிபான்கள் தெருக்களில் ஒழுங்கை பராமரிப்பதாகக் கூறினார்.
CNN's @clarissaward reports on what Afghanistan looks like as the Taliban take over.https://t.co/pJuaHC3iBC pic.twitter.com/zx9shFE8Lj
— New Day (@NewDay) August 16, 2021
“அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிடுகிறார்கள், ஆனால் அவர்கள் அதே நேரத்தில் நட்பாகத் தோன்றுகிறார்கள்,” என்று அவர் விளக்கினார்.
எனினும், அந்த பெண் பத்திரிகையாளர் அதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார். ஒரேநாள் மாற்ற மீம் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.
This meme is inaccurate. The top photo is inside a private compound. The bottom is on the streets of Taliban held Kabul. I always wore a head scarf on the street in Kabul previously, though not w/ hair fully covered and abbaya. So there is a difference but not quite this stark. pic.twitter.com/BmIRFFSdSE
— Clarissa Ward (@clarissaward) August 16, 2021
வர்ணஉடையணிந்து எடுத்த புகைப்படம் தனியார் வளாகமொன்றில் எடுக்கப்பட்டதாகவும், காபூலின் தெருவில் எப்போதும் தலையை மூடியே சென்றதாகவும், ஆனால் இப்போது போல முழுமையாக தலைமுடி முழுவதுமாக மூடப்பட்டிருக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.