மேல் மாகாணத்தில் முதியவர்கள், தீவிர நோய்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் நடமாட முடியாவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடமாடும் தடுப்பூசி திட்டம் இன்று தொடங்குகிறது.
நடமாடும் தடுப்பூசி திட்டம் சிறி ஜயவர்தனபுர, இராணுவ தலைமையகத்தில் இருந்து செயல்படும்.
இராணுவ மருத்துவப் பிரிவின் மருத்துவ குழுக்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர்களை கொண்ட 10 வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.
சேவை தேவைப்படுபவர்கள் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) 1906 என்ற ஹொட்லைன் மூலமாகவோ அல்லது 0112860002 வழியாகவோ பதிவு செய்ய வேண்டும் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1