25.4 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

கொழும்பில் மட்டும் 150,000 பேர் தடுப்பூசி செலுத்தாமலுள்ளனர்!

கொழும்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 150,000 நபர்கள்  COVID-19 தடுப்பூசியைப் பெறாமலுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

30 முதல் 59 வயதிற்குட்பட்ட 99,373 நபர்கள் இதுவரை தடுப்பூசி பெறுவதை தவிர்த்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட 46,600 முதியவர்களும் தடுப்பூசி போடவில்லை.

தடுப்பூசி போடப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மற்றும் கொலன்னாவ பகுதிகளில் வசிப்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஒப்புதலுடன் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்ல காவல்துறை ஏற்கனவே ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடாத அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக சுகாதார அதிகாரிகள் ஷாலிகா மைதானத்தில் சிறப்பு தடுப்பூசி மையத்தை அமைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

வெடுக்குநாறிமலையில் நிம்மதியான வழிபாட்டுக்கு வழி வேண்டும் – துரைராசா ரவிகரன்

east tamil

முன்னாள் அமைச்சர் ஐவருக்கு விசாரணை

east tamil

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

Leave a Comment