வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சக உத்தியோகத்தர்களும் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணாத ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் அவசர மின்சார பழுதுகள், மக்களின் முறைப்பாட்டு சேவை போன்றன இயங்கி வருகின்றன.
வவுனியா பிரதம மின்பொறியியலாளர் காரியாலயத்தில் ஒருவருக்கும், வவுனியா மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் இருவருக்கும், மடு மின்சார சேவை நிலையத்தில் ஒருவருக்கும் என நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணிய 34 ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.