யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில், வடமாகாணத்தில் 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 44 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 417 பேரின் பிரிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் 33 பேருக்கு தொற்று உறுதியானது.
சங்கானை மாவட்ட வைத்தியசாலையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுதவிர, பலாலி இராணுவ முகாமை சேர்ந்த ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம், வவுனியாவை சேர்ந்த ஆணுக்கும், கிளிநொச்சி, செல்வா நகரை சேர்ந்த பெண்ணுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 8 பேரும், அக்கராயன்குளம் மாவட்ட வைத்தியசாலையில் 6 பேரும், உருத்திரபுரம் மாவட்ட வைத்தியசாலையில் 5 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் 10 பேரும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 5 பேரும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவரும், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவரும், இரணைமடு விமானப்படை முகாமில் ஒருவரும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.