25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
சினிமா

இலங்கைப் பெண்ணுக்கு அல்வா கொடுத்த வழக்கு: நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட யுவதியிடம் பண மோசடி செய்ததாக மேற்கொள்ளப்பட்ட புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா இன்று மாலை ஆஜரானார்.

இலங்கையை சேர்ந்த வித்யா என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அங்கு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் தன்னுடன் கடலை போட்ட ஆர்யா, திருமணம் கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக சிபிசிஐடியிடம் புகார் அளித்தார்.

கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்குறுதியை மீறி, சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

சாயிஷாவுடனான திருமணம் குறித்து ஆர்யாவிடம் வித்யா கேள்வி எழுப்பியபோது, சாயிஷாவின் பெற்றோர் தனது கடன்கள் அனைத்தையும் செலுத்துவதாக உறுதியளித்ததால் மட்டுமே அவர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கூறியதாகவும், ஆறு மாதங்களுக்குள் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மட்டுமே, தான் அந்த திருமணத்துக்கு சம்மதித்ததாக ஆர்யா கூறியதாக வித்யா தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யாவிடம் சம்மன் அனுப்பிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், புகாரில் முகாந்திரம் உள்ளதா என்ற அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பான விசாரணைக்காக நடிகர் ஆர்யா இன்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

Leave a Comment