25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா

பிள்ளைகளை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை!

பிள்ளைகளைக் கொன்று விட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு கீதா என்ற மனைவியும், ரஷிதா, விஷ்வா என்ற இரு குழந்தைகளும் இருந்தனர். இதனிடையே சந்திரன் அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றை குத்ததைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமால் இருந்ததாக தெரிகிறது. மேலும் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்தபோது, கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொடங்கிய நிலையில் இருந்ததோடு, குழந்தைகள் இருவரும் தரையில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலில் நஷ்டமா அல்லது கடன் பிரச்சனை காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை

east pagetamil

சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி

Pagetamil

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

Pagetamil

“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை!” – விஜய் பேச்சுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

Pagetamil

“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு

Pagetamil

Leave a Comment