கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி தேவைப்படுவதாக குருதிப் பிரிவு தெரிவிக்கின்றது.
AB, B குருதிவகை பற்றாக்குறை காணப்படுவதாகவும், கொவிட் தடுப்பூசி நாடளாவிய ரீதியில் செலுத்தப்படுவதால் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குருதி கொடையாளர்கள் தாமாக முன்வந்து குருதி கொடை வழங்கி வருகின்றனர்.
எனினும் விபத்து மற்றும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் குருதி தேவை ஏற்படும் சூழல் நிலவும் சந்தர்ப்பங்களில் நெடுக்கடி ஏற்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குருதி பற்றாக்குறையை தீர்க்க கொடையாளர்கள் முன்வரவேண்டும் என கிளிநொச்சி வைத்தியசாலையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடையாளர் ஒருவர் முன்வரும்போது, அவர் கொவிட் தொற்றுக்குள்ளானவர் எனின் குணமடைந்த பின்னர் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை திகதியிலிருந்து 1 மாதம் கடந்தவராகவும், தடுப்பூசி பெற்றிருப்பின் 1 வாரம் கடந்தவராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் கருத்தில் கொண்டு இரத்த வங்கிக்கு குருதி கொடைகளை வழங்க முன்வர வேண்டும் என வைத்தியசாலையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.