29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
கிழக்கு

UPDATE: மாமாங்க பிள்ளையார் நிர்வாகத்திற்கு அபராதம்: பிரதம குரு உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

மட்டக்களப்பு மாமாங்கம் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெரும் திரளான பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர், இவ்வாறு கொவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு வருவதாகவும் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாமாங்கம் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் கொவிட் சுகாதார வழிகாட்டல்கள் எதனையும் பின்பற்றவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் ஐந்து அரங்காவலர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து அரங்காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நடந்த மண்முனை வடக்கு பிரதேச செயலக கொரோனா செயலணி கூட்டத்தில், அறங்காவலர்கள், பிரதம குருக்கள் உள்ளிட்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த  தீர்மானிக்கப்பட்டது. அவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களையும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!