Pagetamil
உலகம்

ஜெஃப் பெஸோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரரானார் பெர்னார்ட் அர்னோல்ட்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னோல்ட்.(72). இதுவரை ஜெஃப் பெஸோஸ் இந்த இடத்தில் இருந்தார்.

இவருக்குச் சொந்தமான 70 பிராண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னோல்ட் 198.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் 1 பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவ்வப்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 72 வயதான பெர்னார்ட் அர்னோல்ட் உலகப் பணக்காரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பட்டியல் வெளியிடுவதால், பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியல் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் உள்ள அமேசன் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 194.9 பில்லியன் டொலர்களுக்கு அதிபதியாக உள்ளார். 2020 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளும் லொக்டவுனில் இருந்தபோது ஒன்லைன் வர்த்தகம் வாயிலாக 38% வருவாய் ஈட்டியுள்ளது அமேசன்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லாவின் எலோன் மஸ்க் 50வது இடத்தில் இருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

எலான் மஸ்க் வசமாகும் டிக்டொக் செயலி

east tamil

அமெரிக்க பாராளுமன்றத்தில் தமிழ் மாதமாக ஜனவரி

east tamil

பைடன் நிர்வாகம் ஒரு வருடம் முயன்றும் முடியாததை ட்ரம்ப் தரப்பு ஒரு சந்திப்பில் சாத்தியமாக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment