28.1 C
Jaffna
December 29, 2024
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் 35 வருடங்களின் பின் இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 35 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று கும்புறுமூலை இராணுவ முகாமில் நடைபெற்றது.

இதில் 7 ஏக்கர் அரச காணி பிரதேச செயலாளரிடமும், தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை, கிரான் பிரதேச செயலாளர்களான கோ.தனபாலசுந்தரம்,எஸ்.ராஜ்பாபு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த யுத்த காலத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இவ் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 1980 காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்த காணியின் ஒரு பகுதியில் அரச அச்சக கூட்டுத்தாபனம் அமைந்திருந்தபோதிலும் அது செயல்படாத நிலையில் விசேட அதிரடிப் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்தது.

அக்காணியானது தற்போது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டாலும் அப்பகுதியில் வழமைபோல் செயல்பட்டு வரும் வீதி சோதனைச் சாவடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் நிவாரண உதவித்திட்டம்

east tamil

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் விஜயம்

east tamil

கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சி: தம்பலகாமத்தில் பயிற்சி செயலமர்வு

east tamil

பசுமை புகையிரதமாக 4வது இடத்தில் திருகோணமலை

east tamil

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருகோணமலை வேலையில்லா பட்டதாரி நிர்வாக, ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பு

east tamil

Leave a Comment