வவுனியா வடக்கு ஆலங்குளம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் கிணற்றுள் வீழ்ந்து பரிதாப மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் தாய், தந்தை ஆகிய இருவரும் பாட்டியுடன் பிள்ளைகளை தங்க வைத்து விட்டு வேலைக்குச் சென்ற நிலையில், பாட்டி கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது நீர் நிறைந்த கிணற்றுள் தண்ணீர் அள்ளச்சென்ற சிறுமி கிணற்றுள் தவறி வீழ்ந்த நிலையில், அயலவர்களால் அரைமணி நேரத்துக்குள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலங்குளம் முருகானந்தா வித்தியாலயத்தில் தரம் 1 இல் கல்வி பயிலும் செல்வராஜ் அனுசியா (வயது 06) என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.