பாணந்துறை ஆதார மருத்துவமனையின் கோவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது நபர் நேற்று முன்தினம் (28) காலைவைத்தியசாலையிலிருந்து தப்பித்து சென்றார். எனினும், அவர் பின்னர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளி தப்பிய தகவலறிந்து, சுகாதார பரிசோதகர்கள் அவரை நகரத்திற்குள் அடையாளம் கண்டனர். சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலை மீறி, பாணந்துறை- மருதானை புகையிரதத்தில் ஏறி தப்பிக்க முயன்றார்.
பின்னர், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார், புகையிரதத்திலிருந்து அவரை கட்டாயமாக இறக்கினர்.
அவர் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புகையிரதம் கிருமி நீக்கப்பட்டதால் அரை மணித்தியாலம் தாமதித்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1