வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி என்பவற்றில் இன்று (28) வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
சுகாதாரப் பிரினரின் ஏற்பாட்டில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உத்தியோக பூர்வமாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிபாளர் எம்.மகேந்திரன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சு.அன்னமலர், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை இதன்போது அவதானிக்க முடிந்தது.