வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா, முஸ்லிம் மகாவித்தியாலத்தில் இன்று (28) காலை முதல் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாண்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இவ்வாறு சீனாவின் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதன்போது, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1